Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு முன்னாள் ஆயுதப்போரளிகளுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச்சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல்.முஹம்மட் நசீர் தெரிவித்தார்.
'2009.05.18 இலங்கையில் ஆயுதப்போராட்டம் நிறைவுபெற்றதன் பின்பு இலங்கை ஆயுதப்படைகளினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட அல்லது சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் ஆயுதப்போராளிகளை சர்வதேச துணையுடன் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட வேண்டும்' என்று கிழக்கு மாகான சபை உறுப்பினர் கோ.கருணாகரனால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரோரணைக்கு பதிலிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் 62ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை (25) தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் இடம்பெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'இவ்விடயம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக முன்னாள் போராளிகள் மர்மமான நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மற்றும் வலையத்தளங்கள் ஊடாக அறியக்கிடைத்தது. உண்மையில் அவ்வாறு ஓர் பிரச்சினை இருப்பின் இது தொடர்பில் உடனடியாக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும். குறித்த போராளிகளின் உடற்கூறு பரிசோதனைக்கு எம்மிடம் சிறப்புத்தேர்ச்சி வாய்ந்த சர்வதேச தரமுடைய வைத்திய உபகரணங்களும், வைத்திய நிபுணர்களும் எம்மிடமுள்ளன.
ஆகவே, எம்மிடம் உள்ள வைத்திய நிபுணர்களைக்கொண்டு மாகாண மட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதர சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு இக்குழு மூலம் எதிர்வரும் நாட்களில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்' என்று கூறினார்.
'கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் காணப்படும் ஆயுதப்போராட்டம் நிறைவுபெற்றதன் பின்பு இலங்கை ஆயுதப்படைகளினால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொண்டு இந்த உடற்கூறு பரிசோதனையை செய்து கொள்ளலாம்' என்றும் அவர் தெரிவித்தார்.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago