2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'மார்பகப் புற்றுநோய் சிகிச்சையை 50 வீதமானோர் தாமதித்து பெறுகின்றனர்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மார்பகப் புற்றுநோய் ஏற்படுகின்ற பெண்களில் 50 சதவீதமானோர் காலதாமதத்தின் பின்னரே  வைத்தியத்தை நாடுகின்றனர். இதனால், புற்றுநோயைக் குணப்படுத்தமுடியாத நிலையில் மரணம் சம்பவிப்பதாக நிந்தவூர் பிரதேச சகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் தெரிவித்தார்.

மார்பகப் புற்றுநோய்க்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், இப்புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,  'எமது ஆரோக்கிய குணம்சங்களில் மாற்றங்களை உணரும்போது, வைத்திய ஆலோசனைகளை பெற்று  அதற்குரியை சிகிச்சை பெற்றுக்கொண்டால் எம்மைப் பாதுகாக்கமுடியும்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X