Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 14 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
உலகில் 09 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் குறைந்த வயதில் இறக்கும் அபாயத்துக்குள் அவதிப்படுவதாக யுனிசெப்பின் 2015ஆம் ஆண்டுத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
அத்துடன், 182 மில்லியன் சிறுவர்கள் இன்னமும் இரண்டாம் நிலைக் கல்வியை பெறமுடியாதுள்ளதாகவும் அவர் கூறினார்.
அக் அல் ஹிக்மா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஒவ்வொரு வருடமும் ஏதேனும் வன்முறைகளினால்; 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 02 வயது முதல் 14 வயதுக்கிடைக்கப்பட்ட 85 சதவீதமான சிறுவர்கள் உலகில் உள ரீதியான தண்டனைக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். உலகில் 150 மில்லியன் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரு பில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் பயங்கரவாதத்தினாலும் ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
36 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
1 hours ago