Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டதையும் ஐ.நா விசாரிக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் 25ஆவது வருட வெளியேற்றத்தையிட்டு தேசிய சமாதானப் பேரவை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை 2002 ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையான காலத்தை மட்டுப்படுத்தியிருக்கின்றது.
ஆனாலும், இந்தக் காலப்பகுதியோடு மாத்திரம் அதன் விசாரணைகள் நின்று விடாது, 1990ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 90 ஆயிரம் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் யுத்தத்தின் காரணமாக இடம்பெற்ற இன்னும் பல தீவிர மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னோக்கி விசாரிக்கப்பட வேண்டும்.
இந்த ஒக்டோபர் மாதத்துடன் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு 25ஆவது ஆண்டு நிறைவடைகிறது.
90,000 வலுவான வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றும் தேசிய அளவில் ஒரு மனிதாபிமான மற்றும் அரசியல் பிரச்சினையாகத் தொடர்ந்த வண்ணமுள்ளது.
வெளியேற்றப்பட்டவர்களில் 80 சதவீதமானோர் தங்களது பூர்வீக வாழ்விடங்களுக்கு வெளியே தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனினும், இலங்கை மக்களில் ஒரு பிரிவினராகிய இவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு பொது கவனம் அல்லது முன்னுரிமை கொடுக்கப்பட்டு ஒரு நீதியான தீர்வு இதுவரைக் கிட்டவில்லை.
இலங்கையில் நல்லிணக்க, பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் இலங்கை ஏற்கொண்ட இணை ஆதரவாளரைக் கொண்ட அரசாங்கத்தின் முடிவு நாட்டின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.
மேலும்,இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சமீபத்திய மீள்குடியேற்றம் வில்பத்து தேசிய பூங்கா அத்து மீறல் என்று சர்ச்சைக்குரிய அத்துமீறலாகக் காட்டப்பட்டுள்ளது.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழு, சர்வதேச பங்கு கொண்டு பொறுப்புக்கூறும் ஒரு நீதி பொறிமுறை மற்றும் இழப்பீட்டுக்கான ஒரு அலுவலகம் நிறுவ வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு சர்வதேச தரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று ஒரு நீதியான தீர்வு அடிப்படையை வழங்குகிறது.
இது வெளியேற்றப்பட்டு தொடர்ந்து இயலாமையிலுள்ள முஸ்லிம்கள் தங்கள் உரிமையை நடைமுறையில் கொண்டு வருவதற்கும் தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்புதற்கும் ஒரு பிரயோகத்தை அளிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
01 Oct 2025
01 Oct 2025