2025 ஜூலை 16, புதன்கிழமை

'மக்களை குடியமர்த்த முன்னர் நான்கு தேவைகளை நிறைவேற்ற வேண்டும்'

Gavitha   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

ஒரு புதிய கிராமத்தை உருவாக்கி, அங்கு மக்களை குடியமர்த்துவதற்கு முன்னர், வைத்தியசாலை, பாடசாலை, தபால்நிலையம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றை அமைத்த பின்னரே, மக்கள் குடியமர்த்த வேண்டும் என்று கல்முறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அன்னாமலை ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா, நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றது.

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'எந்தவொரு நாடாக இருந்தாலும் அந்த நாட்டிலுள்ளவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் மாத்திரமே, அந்நாட்டில் கல்வி நடவடிக்கை, தகவல் பரிமாற்றம்,  மனிதர்களிடையே உண்டாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பன நிறைவேற்றப்படும்.

ஒரு நாட்டுக்கு தேவைப்படுகின்ற மிக முக்கிய தேவைப்பாடுகளில் ஒன்றுதான் வைத்திய சேவையாகும். இச்சேவை இல்லையென்றால்,  அந்நாடு பாரிய அழிவுப் பாதையை முன்னொக்கிச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமேமில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .