2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'மத வழிபாடுகளுக்கு சுதந்திரம் உண்டு'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

இந்த நல்லாட்சியில் அனைத்து இனத்தவரும் அவரவர் சமய வழிபாடுகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்வதற்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் ஒழுங்குசெய்த வாணி விழா மாநகர சபை வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த காலத்தில்; சிறுபான்மைச் சமூகத்தினர் சமய வழிபாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன். தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது. எமது நாட்டில் தற்போது மதச் சுதந்திரம் முழுமையாக காணப்படுகின்றது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X