Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
'வடகிழக்கு இணைப்பு என்பது இன்று, நேற்று வந்த ஒன்றல்ல. 1827ஆம் ஆண்டு தொடக்கம் வந்த ஒன்று. இதற்கு யாராவது எதிர்த்தார்கள் என்றால், அவர்களுடன் மனந்திறந்து பேசத் தயார் என கிழக்கு மாhகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கஞ்சிகுடிச்சாறுகுளப் புனரமைப்புவேலை, நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களும் முக்கியமானவர்கள். அதன் அடிப்படையில் சமஷ்டியுடன் கூடிய கூட்டாட்சியே தேவையானது. அதன் மூலம் அனைத்து இனங்களும் சம உரிமை பெற்று வாழமுடியும். அதன் அடிப்படையில் த.தே.கூ. அன்றிலிருந்து இன்றுவரைக்கும் போராடி வருகின்றது.
வடகிழக்கு இணைப்பு என்பது 1827ஆம் ஆண்டு இந்த நாட்டில் அரசியல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு முதல் இருந்து வருகின்றது. வடகிழக்கு இணைப்பு என்பதை யாராவது எதிர்ப்பார்களேயானால், அவர்களுடன் மனந்திறந்து பேச நாங்கள் என்றும் தயாராக இருக்கின்றோம்.
இன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் அபிவிருத்தியுடன் கூடிய நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் பயணிக்கின்றோம். கடந்த 2015.01.08 திகதிக்கு முன்னர் இந்த நாட்டில் அராஜகமான ஆட்சி நடைபெற்றது. அதன் பின்னர்தான் நல்லாட்சி என்ற மகுடம் இந்த நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது இதற்கு மிகவும் பெறுமதியான பங்காளிக்கட்சியாக த.தே.கூ. பெரும் பங்காற்றி வருகின்றது.
இதன் காரணத்தினால் அழிவடைந்து, நலிவடைந்து போயுள்ள எமது மக்களுக்கான அபிவிருத்திகளை ஓரளவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இன்று இந்த இடத்தில் செய்யப்படுகின்ற குளத்தின் புனரமைப்பு வேலைகளின் நிமிர்த்தம் விசாயிகள் நன்மையடைய இருக்கின்றார்கள்.
கல்லோயா திட்டத்தின்போது எங்களுக்கு பல ஆபத்துக்கள் வந்தன. அதனை முறியடிப்பதற்காகத்தான் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் இணைந்து அறப்போரை ஆரம்பித்து திட்டமிட்ட குடியேற்றத்தினை தடுத்து நிறுத்தினோம்.
எமக்கான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் எங்கள் அரசியல் பயணத்தினை முன்னகர்த்தி வருகின்றோம். இந்த நாட்டிலே இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு திட்டம் இருக்கின்றது அதனடிப்படையில்; எமது கட்சியை பொறுத்தவரையில் இரண்டு சமாந்தரமான பாதைகளை செயற்படுத்த வேண்டியுள்ளது. ஒன்று மக்களுக்கான அபிவிருத்தி மற்றது எமது உரிமையை இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் ஏற்றி பெற்றுக்கொள்வதாகும்.
எங்களது செற்பாடுகள் அனைத்தையும் தென்பகுதியில் இருக்கின்ற கூட்டு எதிர்க்கட்சியொன்று அவதானித்துக்கொண்டு கல்லெறிந்து குழப்புவதற்காக பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அதற்கு தீனி போடாத அளவுக்கு எங்களது செயற்பாடுகள் அமையவேண்டும் என எமது தலைவர் மிகவும் காத்திரமான முறையில் குரல் எழுப்பி இருக்கின்றார்.
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் அமைப்பு ஒன்று ஆக்கப்படுகின்றபோது அந்த விடயங்கள் வெளிப்படையாகவே பத்திரிகையில் வந்து கொண்டிருக்கும். ஆனால், இலங்கையின் ஜனநாயகம் என்ன என்பதனை அனைவரும் புரிந்து கொண்டு செயற்படவேண்டும்' எனவும் கூறினார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago