2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'மருதின் விழுதுகள்' கௌரவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது செஸ்ரோ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 'மருதின் விழுதுகள்' கௌரவிப்பு பெருவிழா எதிர்வரும்   ஞாயிற்றுக்கிழமை(8)  பிற்பகல் 3.30 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்; பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல்,  பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து புதிதாக அதிபர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 17பேரும் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவான ஒருவரும் கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவான ஒருவரும் கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஒருவருமாக மொத்தம் இருபது இளம் புத்திஜீவிகள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X