2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'மருதமுனை அல்மதீனா உயர்ந்து நிற்கிறது'

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கல்முனைப் பிரதேசத்து மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கனவுப் பாடசாலையாக மருதமுனை அல்மதீனா வித்தியாலயம் உயர்ந்து நிற்கிறது என கல்முனை கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் தெரிவித்தார்.

மருதமுனை அல்மதீனா வித்தியாலய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா  தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்தப் பாடசாலை மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கனவுப் பாடசாலையாக உயர்வதற்கு மிகவும் அர்ப்பணிப்போடு இங்கு கடமை புரிகின்ற அதிபரும் ஆசிரியப் பெருந்தகைகளுமே காரணமாகும்.

எந்த விடயமாக இருந்தாலும் அதை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் தனித்துவமாகவும் செய்து காட்டுவதில் மருதமுனை அல்மதினா வித்தியாலயம் இப்பிரதேசத்தில் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

பிள்ளைகளை கற்றோர் சபையிலே முன்னால் இருக்கச் செய்வதுதான் பெற்றோர்களுடைய கடமையாக இருக்க வேண்டும். அந்தக் கடமையைப் போன்று பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளும்  இருக்கிறது.இந்தப் பிள்ளையைப் பெற்றோர் என்ன  தவம் செய்தார்களே  என்று ஊராரும் உலகமும் வியந்து பேச வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .