2025 மே 19, திங்கட்கிழமை

'யாத்திரிகர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும்'

Princiya Dixci   / 2016 ஜூன் 19 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் சமய ஒழுக்க விழுமியங்களைக் கடைபிடிக்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 

யாத்திரையில் கலந்துகொள்கின்றவர்கள் தங்களுக்குப் பொருத்தமான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் எனவும் இறை நாமத்தை மனதில் கொண்டு பயபக்தியுடன் செயற்படுமாறு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றத் தலைவர் வே.சந்திரசேகரம், செயலாளர் பெ.தணிகாசலம் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

கடந்த காலங்களில் யாத்திரிகர்கள் சமய ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டதாகவும், கதிர்காமத்துக்கான காட்டுவழிப்பாதையானது எதிர்வரும் 27ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X