2025 மே 22, வியாழக்கிழமை

'யாரும் பணம் வழங்க வேண்டாம்'

Niroshini   / 2016 ஜனவரி 24 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம். ஹனீபா

சுகாதார அமைச்சர், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சில பேர்வழிகள், சுகாதாரத்துறையில் தொழில் பெற்றுத்தருகின்றோம், கல்வித்துறையில் உள்ள சிற்றூழியர்களுக்கு பதவி உயர்வு பெற்றுத்தருகின்றோம் எனும் பசப்பு வார்த்தைகளை பேசி மக்களை ஏமாற்றி பெருந்தொகையான பணத்தை பெற்று வருகின்றமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார, சுதேச வைத்தியம் மற்றும் போசாக்கு பிரதி அமைச்சர் பைஷல் காசிம் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சுகாதாரத்துறை சம்பந்தமான பிரச்சினைகளையும் அது தொடர்பிலான தேவைகளை என்னுடன் நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ பேசி அதற்கான தீர்வுகளை என்னுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எமது அமைச்சினூடாக வழங்கப்படவுள்ள நியமனங்கள் யாவும் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள கட்சிப் பிரமுகர்களினூடாக மட்டுமே வழங்கப்படும்;. தொழில் வழங்கும் விடயத்தில் எந்த முகவர்களையும் நான் நியமிக்கவில்லை. அவ்வாறு நியமிக்கவும் மாட்டேன் என்றார்.

'கிராமப் புறங்களில் உள்ள படித்த தமிழ், முஸ்லிம் யுவதிகள் இந்த ஏமாற்றுப்பேர்வளிகளிடம் பெருந்தொகையான பணங்களை வழங்கியிருப்பதாக பல முறைப்பாடுகள் எனக்கு கிடைத்துள்ளன.

எனவே, தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்விடயத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்' எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X