2025 மே 21, புதன்கிழமை

'யொவுன்புரய' இளைஞர்கள் மாநாடு சிகிரியாவில் நடைபெறும்

Princiya Dixci   / 2016 மார்ச் 21 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே. றஹ்மத்துல்லா

எதிர்காலத்தில் நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய வகையில் இளைஞர்களைத் தயார்படுத்தும் நோக்கில் 'யொவுன்புரய' இளைஞர்கள் மாநாடு, எதிர்வரும் 30ஆம் திகதி சிகிரியா விமானப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ரி.ரிஸ்வான் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கமைய பிரதேச மட்டத்திலுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளின் தகவல்களைத் திரட்டி, அதனூடாக இளைஞர் கழகங்களை அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பாக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம், இன்று திங்கட்கிழமை (21) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்மாநாட்டிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதிலிருந்தும் 5,000 இளைஞர்களும் யுவதிகளும், சர்வதேச நாடுகளிலிருந்து சுமார் 100 இளைஞர்களும் யுவதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேலும், இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்திலிருந்து 200 இளைஞர் மற்றும் யுவதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .