2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

' வாக்குறுதியளித்தவாறு அட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் எம்.பி பதவி'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், யூ.எல்.மப்றூக்

தற்போது ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தான் வாக்குறுதியளித்தபடி நிச்சயமாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுமென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' எனும் தலைப்பிலான இளைஞர் காங்கிரஸ் மாநாடு, சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் சனிக்கிழமை (31) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கப்பட்ட சுகாதார அமைச்சுப் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 02 வருடங்கள் உள்ளன.

தான் வாக்குறுதியளித்தபடி அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படுமென்பதுடன், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை வழங்கிய வாக்குறுதியை ஒருபோதும் மீறமாட்டாது.' என்றார்.  

'இப்பிரதேச மக்களுக்கு மு.கா. தலைமைத்துவம் அளித்த வாக்குறுதிப்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படுமென்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்' எனவும் அவர் தெரிவித்தார்.

எங்களின்; தலைவர் மர்{ஹம் அஷ்ரப் கண்ட கனவினூடாக உருவான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை  இன்னும் உத்வேகத்துடன் கொண்டுசெல்ல வேண்டும். அத்துடன் இவ்வருட இறுதிக்குள் 10,000 இளைஞர்களை ஒன்று திரட்டவுள்ளதாகவும் மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இளைஞர்களை தனியாக ஒன்று திரட்டும் அரசியல் செயற்பாடுகளுக்கு மட்டும் பயிற்சியளிக்காது ஏனைய துறைகளிலும் குறிப்பாக தொழில் ரீதியான விளக்கமளிப்புக்கள் சமூக சேவை மற்றும் கலை கலாசார செயற்பாடுகள் போன்ற இன்னோரன்ன துறைகளிலும் தனியான மற்றும் கூட்டு செயற்பாடுகளுக்கு அவர்களை தயார்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செய்யப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .