2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

500 வீடுகள் அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

'அனைவரும் நிழலில்' முதன்மை மாதிரித் திட்டத்துக்கமைய அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 500 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் வருமானம் குறைந்த மற்றும் வீடுகள் இல்லாத 25 பேர் இந்த வீட்டுத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்துக்கமைய 100 பேருக்கு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட வேலை தமண, உகண, பதியத்தலாவ, அம்பாறை  ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைச்சர் தயா கமகேயினால் சனிக்கிழமை (31) ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது வீடுகள் அமைப்பதற்கான நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டதுடன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகளை அமைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் 250,000 ரூபாய்; வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X