2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

41 வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவில் 'திரிய பியச' திட்டத்தின் கீழ், 41 வீடுகள் திவிநெகுமப் பயனாளிகளுக்கு இதுவரையில் கையளிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலகத்தின் திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவு உத்தியோகஸ்தர் எம்.தெய்வேந்திரன் தெரிவித்தார்.

திவிநெகுமப் பயனாளி ஒருவருக்கு 'திரிய பியச' வீடு கையளிக்கும் நிகழ்வு, ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்றில்; இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மேலும் இவ்வருடத்தில் 04 வீடுகள் ஆலையடிவேம்புப் பிரதேச செயலகப் பிரிவில் கையளிக்கப்படவுள்ளன. கண்ணகி கிராமத்தில் ஒரு வீடும் சின்னமுகத்துவாரம் கிராமத்தில் ஒரு வீடும் அக்கரைப்பற்றில் 02 வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன.

இவ்வீடுகள் அமைப்பதற்கான நிதியை திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவு வழங்குவதுடன், ஒவ்வொரு வீட்டுக்கும் 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .