2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'வைத்தியப் பரிசோதனையின் பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

எதிர்காலத்தில் மாணவர்களை பாடசாலைகளில் சேர்க்கும்போது அவர்களை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் பாடசாலையில் சேர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

தொற்றா நோய்களுக்கு சிகிச்சை பெறவந்த நோயாளிகளுக்கு தொற்றாநோய் பற்றி விளக்கமளிக்கும் நடவடிக்கை, அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையின் தொற்றநோய் பிரிவுப் பொறுப்பதிகாரி, வைத்தியர்; எம்.பி.எப்.நப்தா தலைமையில் வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'தற்போது அதிகமான இளைஞர்கள் கஞ்சா, மதுபானம், புகையிலை போன்றவற்றை  பாவிப்பவர்களாக உள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளில்  பாடசாலை மாணவர்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலையில் மாணவர்களை அனுமதிக்கும் முன்னர் அவர்களை வைத்தியப் பரிசோனையில் ஈடுபடுத்திய பின்னர் பாடசாலையில் அனுமதிக்கலாமென்ற இத்திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது.   

எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் மனிதனை இன்று ஆட்டிப்படைக்கின்ற மிகக்கொடிய நோய்களாகும். இந்த நோய்கள் எதனால் வருகின்றது? அதற்கான காரணம் என்ன என்பதை நாம் உணர்ந்து செயற்படவேண்டும். அதற்காக எமது அன்றாட வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் அவசியமாகும். இதனை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராதவரை நாம் ஒருபோதும் நோயிலிருந்து விடுபடவே முடியாது.

நீரிழிவு, கொலஸ்ட்ரோல் என்ற நோய் இல்லாதவர்கள் இன்று யாருமில்லை. இந்த நோய்களைப் பற்றி யாருமே கதைப்பதுமில்லை இப்போது நோய்களைப் பற்றி கதைப்பதென்றால் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களைப் பற்றியே இன்று அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான கொடிய நோய்களிலிருந்து நாம் அனைவரும் பாதுகாப்புப் பெற எமது அன்றாட வாழ்க்கை முறையையும் உணவுப் பழக்கத்தையும் இன்றிலிருந்து மாற்றியமைக்க முயலவேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .