2025 மே 21, புதன்கிழமை

விதாதாவள நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான், அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச விதாதாவள நிலையத்துக்கான புதிய கட்டடத்தொகுதி இன்று திங்கட்கிழமை விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் திறந்து வைக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச விதாதாவள நிலையம் கடந்த பல வருடங்களாக பிரதேச செயலகக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்நிலையில் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அமைச்சு கடந்த வருடம் இதற்கென ஒதுக்கீடு செய்திருந்த 10 மில்லியன் ரூபாய் நிதியில் நேர்ட் எனும் ஒப்பந்த நிறுவனத்தினால் இப்புதிய கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X