Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
வீரமுனை படுகொலையானது திட்டமிட்டமுறையில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதொன்றாகும் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அம்பாறை வீரமுனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தினை நினைவு கூர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“26 வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்திலே எமது தமிழ் உறவுகள் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்டார்கள். அந்த நாளை நினைத்து இன்று இந்த இடத்திலே அவர்களது ஆத்மா சாந்தி பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இன்றைய நாளில் நாங்கள் சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்ளும் விடயம் என்னவென்றால் கொலை செய்யப்பட்ட, காணாமல் போன எமது மக்களை கண்டு பிடிப்பதற்கான ஆணைக்குழு ஒன்றினை அமைத்து அந்த ஆணைக்குழு மூலமாக சரியானதும் மிக நேர்தியானதுமான விசாரணைகளை மேற்கொண்டு எமது மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
தற்போது கொலை செய்யப்பட்ட, காணாமல் போனவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று கொழும்பில் அமைக்கப்படவுள்ளதாக அறிகிறோம். அப்படி கொழும்பில் ஆணைக்குழுக்கள் அமையப்பெறுமாக இருந்தால் எமது மக்கள் சுதந்திரமாகச்சென்று தங்களது பதிவுகளை மேற்கொள்ள முடியாமல் போகும். அதன்காரணமாக அமையப்பெறவுள்ள ஆணைக்குழு காரியாலயங்களை தமிழர்கள் செறிந்து வாழக்கூடிய வட-கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும்.
அத்தோடு, ஆணைக்குழுக்களில் சர்வதேசத்தில் உள்ளவர்களையும் இணைத்துக்கொண்டு ஆணைக்குழுவின் விசாரணைகள் அமையவேண்டும்.அவ்வாறு அமையும் பட்சத்திலேதான் எமது மக்களுக்கான சரியானதும் நியாயமானதுமான தீர்வு கிடைக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
18 May 2025