Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 03 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.சரவணன்
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற எமது தாய், 5 வருடங்கள் ஆகியும் அவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. தந்தையின்றி அநாதரவாக வாழ்ந்துவரும் எங்களுக்கு எங்கள் அம்மாவை மீட்டுத்தாருங்கள் என அக்கரைப்பற்று செல்லப்பிள்ளையார் வீதியைச் சேர்ந்த இராசநாயகம் ஸ்ரீதேவியின் (வயது 25), பிள்ளைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்தப் பெண், குடும்ப கஷ்டநிலமை காரணமாக 2010ஆம் ஆண்டு 5 வயதுடைய ஆண் பிள்ளை மற்றும் 3 வயதுடைய பெண் பிள்ளை ஆகிய இருவரையும் கணவணுடன் விட்டுவிட்டு பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றப் பின் மனைவியிடம் இருந்து தொடர்பு ஏதும் இல்லாத நிலையில் பிள்ளைகள் இருவரையும் மனைவியின் அம்மாவுடன் விட்டுவிட்டு கணவர், வேறுதிருமணம் முடித்துள்ளார்.
இந்நிலையில், 5 வருடங்களாக மகளின் தொடர்பு ஏதும் இல்லாத நிலையில் குறித்தப் பெண்ணின் அம்மா கூலிவேலை செய்து இருபிள்ளைகளையும் பராமரித்து வருகின்றார்.
தனது மகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி எடுத்து தருமாறு குறித்த பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பிய உள்ளூர்; முகவரை அனுகியபோது அவர் தாங்கள் அனுப்பிய வீட்டில் குறித்த பெண் சம்பளம் போதாது என அங்கிருந்து அவர்களுக்கும் சொல்லாமல் ஓடிவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஏனைய சம்மந்தப்பட் அதிகாரிகளிடம் சென்று முறைப்பாடு செய்யப்பட்டபோதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், எமது தாயாரை மீட்டுத்தாருங்கள். தங்களுக்கு அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லாமல் அநாதரவாக உள்ளோம் என கண்ணீர்மல்க இரு பிள்ளைகளும் தெரிவித்தனர்.
31 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
52 minute ago
1 hours ago