2025 மே 22, வியாழக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை இடமாற்ற தேவையில்லை

Niroshini   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை பிரதேசத்தில் சுமார்; 20 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், கடந்த வருடம் 35 இலட்சம் ரூபாவை வருமானமாக அரசாங்கத்துக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

இதனை மூடவேண்டிய எந்த தேவையும் இல்லை. அவ்வாறு மூடி, வேறு இடங்களுக்கு இடமாற்ற எடுக்கும் முயற்சியானது, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள தமிழ்,முஸ்லிம் மக்களை பாதிக்கும் செயலாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

அத்துடன், இது தொடர்;பில் கிழக்கு மாகாண சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டு சம்மந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்பிவைக்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X