2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'விவசாய தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன'

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை விவசாயத் திணைக்களத்தில் 1,200 விவசாய தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்தார்.

அம்பாறை, பாலமுனை தமிழ்மொழி மூல விவசாயப் பாடசாலையில் ஒரு வருடகால விவசாய டிப்ளோமா கற்கைநெறியை பயில்வதற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்றுத் திங்கட்கிழமை ஆரம்பமாகின. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த காலத்தை விட இவ்வருடம் முதல் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு கற்கைநெறி மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்காற்றி வரும் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு புதிய தொழில்நுட்ப ரீதியிலான விவசாயச் செய்கையை விவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X