Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட பயிற்சி நிலையங்களில் 30 வகையான பயிற்சிநெறிகளுக்கு இளைஞர், யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 28ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மொழி மூலத்தில் இயங்கும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, மத்திய முகாம், கல்முனை, காரைதீவு, பொத்துவில் (02 பயிற்சி நிலையங்கள்) அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, சாய்ந்தமருது, திருக்கோவில் ஆகிய பயிற்சி நிலையங்களில் முன்னெடுக்கப்படும் பயிற்சிநெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (மட்டம் 5 மற்றும் 4), மின்னியல், எலக்ட்ரிக் மோட்டர் வைண்டர், மரக்கைவினைஞர், குளிர்சாதனப்பெட்டி மற்றும் காற்றுச்சீராக்கி திருத்துநர், நிர்மாணக் கைவினைஞர், நீர்க்குழாய் பொருத்துநர், உருக்கி ஒட்டுநர், தையல், தொலைக்காட்சி வானொலி மற்றும் அதனோடிணைந்த உபகரண திருத்துநர், அலுமினியம் பொருத்துநர், அழகுக்கலை மற்றும் சிகை அலங்கரிப்பாளர், சமையற்கலைஞர், பேக்கர், அறை அலங்கரிப்பாளர், உணவு பரிமாறுநர், வாகன திருத்துநர், ஆடைத்தொழிற்சாலை தரக்கட்டுப்பாட்டாளர், அதிவேக தையல் இயந்திர இயக்குநர், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருத்துநர், சாரதி பயிற்சி ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்படிவங்களை உதவிப் பணிப்பாளர், மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர் என்ற முகவரிக்கு அனுப்பமுடியும். அல்லது, சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்படைக்க முடியுமென நிகழ்ச்சித்திட்ட உத்தியோகஸ்தர் எம்.எம்.மஹ்சூன் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago