2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'வட, கிழக்கு இணைப்பு விடயத்தில் மூக்கை நுழைப்பது ஆரோக்கிய செயல் அல்ல'

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மூக்கை நுழைப்பது ஆரோக்கியமான செயல் அல்ல என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா இன்று  செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'காலாவதியான தனி அலகு கோரிக்கையும்  புதைக்கப்பட வேண்டும். மேலும் மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணம் தற்போது நிம்மதியாக உள்ளது என்றாலும், சில விசமிகளால் சில வகையான  இனத்துவேசம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் வெகு சுலபமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்' என்றார்.

'மேலும் அபிப்பிராய வாக்கு எடுப்பது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிய கதைதான். சாதாரணமாக கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு தமிழ் மக்களுடன் இணைவது சாத்தியமற்றது. அன்று தொடர்க்கம் இன்று வரை இது அன்று தொட்டு இன்றுவரை உள்ள நடைமுறைச் சிக்கல். வடக்கு தமிழ் மக்கள் கிழக்கு தமிழ் மக்களை இரண்டாம் தர முறையில் அவர்களை நடத்துவதுதான்.

கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பு பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னெனில் அரசாங்கமும் மற்றும் மாவட்டம்களிலும் வாழும் மூவின மக்களும் இதற்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X