Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
வட்டார முறையிலான தேர்தல் எவ்வகையிலும் ஐ.தே கட்சிக்கு சாதகமாக அமையப் போவதில்லை என்பதனால் ஜனாதிபதிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க செய்த உதவிக்கு கைமாறாக இம்முறையை விட்டுக் கொடுக்கலாம் எனவும் எதிபார்க்கப்படுகிறது என தேசிய காங்கிரஸ் உறுப்பினரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ் இன்று (09) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தேசிய அரசாங்கம் என்ற போர்வை இருந்தாலும் ஐ.தே.கட்சியின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இவ்வேளையில் வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் என ஐ.தே. கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும் ஜனாதிபதி தலைமையில் இயங்கும் அணியினர் திருத்தி அமைக்கப்பட்ட புதிய வட்டார முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இவர்களின் வேண்டுகோள் அங்கீகரிக்கப்படுமா என பார்த்தால், ஐ.தே கட்சியின் செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திடத்தில் பலமாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதனால் இவ்வணியினரின் விருப்பங்களையும் இலகுவில் நிராகரித்துவிட முடியாது.வட்டார முறையிலான தேர்தல் எவ்வகையிலும் ஐ.தே.கட்சிக்கு சாதகமாக அமையப் போவதில்லை என்பதனால் ஜனாதிபதிக்கு, ரணில் விக்ரமசிங்க செய்த உதவிக்கு கைமாறாக இம்முறையை விட்டுக் கொடுக்கலாம் எனவும் எதிபார்க்கப்படுகிறது .
அவ்வாறு இல்லாமல் ஜனாதிபதியின் அணியினர் மறுத்தால் தேர்தல்முறை மாற்றத்துக்கான அனைத்து வேலைகளும் கடந்த அரசாங்கத்தில் தே.கா தலைவர் அதாஉல்லாவினால் நிறைவு செய்யப்பட்டிருந்தாலும் அதனை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ஒப்பமிட்டு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் சரத்து மாத்திரம் நிறைவடையாமல் நிலுவையில் உள்ளது.
எனவே ஐ. தே. கட்சி இதனை ஆதரிக்குமா என்ற கேள்வியும் இதற்குள் புதைந்து கிடக்கிறது.ஆகவே தேர்தல் முறையினை வைத்தே கட்சிகள் வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என தீர்மானிக்கும்.பழைய முறையில் தேர்தல் நடத்துவதென்றால் 40 சதவீதமானவர்கள் 35 வயதுக்கு குறைந்த இளைஞர்கள் நிறுத்தப்படுவது கட்டாயமானதாகும்.வட்டாரமுறை என்று வருகின்றபோது கட்சியினை விட தனிமனித செல்வாக்கு மேலோங்கிக் காணப்படும் என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago