Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு வடகிழக்கு இணைந்த தீர்வுத்திட்டம் வழங்கப்படும்போது, அம்பாறை மாவட்ட தமிழ் மக்களும் அத்தீர்வுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இல்லாவிடின் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் நிலம் மற்றும் கலை, கலாசாரம் சூறையாடப்பட்டு விடும். எனவே, தமிழர்களுக்கான சமஷ்டித் தீர்வு வழங்கப்படும்போது, அம்பாறை மாவட்ட தமிழர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை ஏற்றியன் ஞாபகார்த்த நினைவுக்கிண்ண கிரிக்கெட் மென்பந்துச் சுற்றுப்போட்டி சனிக்கிழமை (17) மாலை கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் பேசுகையில், 'நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு வடகிழக்கு இணைந்த சமஷட்டி ஆட்சி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தமிழர்கள் இருந்துகொண்டு இருக்கின்றனர். அதனை விரைவில் நல்வலாட்சி அரசாங்கம் செய்யும் பட்சத்தில்தான் இந்த அரசாங்கத்தில் தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது
இந்த நிலையில் தென்கிழகிழக்கு அலகு ஒன்று வரும் பட்சத்தில் அதில் அம்பாறை மாவட்ட தமிழர்கள் உள்வாங்கப்பட்டால் அதனை ஒருபோதும் அம்பாறை மாவட்ட தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
வட கிழக்கு இணைந்த நல்லதோர் சமஷ்டி தீர்வு வழங்கப்படும்போது அதில் அம்பாரைமாவட்ட தமிழர்களையும் உள்வாங்கவேண்டும் அப்போதுதான் அம்மக்களின் நிலங்களையும் உடைமைகளையும் பாதுகாக்கமுடியும் இல்லாவிடின் இவ் அனைத்தும் பறிபோகும் நிலை உருவாகும். ஆகையால் வடகிழக்கு இணைந்த அரசியல் தீர்வில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago