Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
அம்பாறை, கொண்டைவெட்டுவான் இராணுவமுகாமில் 1985ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி, அக்கரைப்பற்றைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தேவராசா என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டு, 30 வருடங்களாகியும், இதுவரை அவர் தொடர்பாக எவ்விதமான விசாரணையும் முன்னெடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு உரியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
மேலும், ஊடகவியளாளர்கள் க.தேவராசா கொலை தொடர்பிலும், இதுவரை எந்தவிதமான விசாரணையும் இடம்பெறவில்லை. எனவே, இப்படுகொலை தொடர்பாகவும் விசாரணை செய்து, குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண உறுப்பினர் த.கலையரசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 1985ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி, அக்கரைப்பற்றில், இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது, அக்கரைப்பற்று தேவராசா வீதியைச் சேர்ந்த வீரகேசரி பத்திரிகையின் பிராந்திய ஊடகவியளார் கணபதிப்பிள்ளை தேவராசாவை அவர் வீட்டில் இருந்து அம்பாறை, கொண்டை வெட்டுவான் முகாமுக்கு இராணுவத்தினர் அழைத்துச் சென்று, 25ஆம் திகதி சுட்டுக்கொன்றனர்.
அத்துடன், அப்போது ஏற்பட்ட வன்செயலில் அவரின் வீடும் தீக்கிரையக்கப்பட்டது. இவரின் உடலைக் கூட உறவினரிடம் அப்போதைய இராணுவதினர் கையளிகவில்லை.
இவ்வாறான நிலையில் அவரது படுகொலை தொடர்பாக, ஆட்சியாளர்கள் எவரும் விசாரணை செய்யாது மூடிமறைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த நாட்டில் 1985ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் க. தேவராசா தொடக்கம் 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி சசிமதன் என்ற ஊடகவியலாளர்கள் வரை 35 தமிழ் ஊடகவியளார் உட்பட 42 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
நல்லாட்சியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர் கணபதிப்பிள்ளை தேவராசா படுகொலை தொடர்பாக நீதியான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதுடன் அவருடைய குடும்பத்துக்கு நஷ்டஈட்டையும் வழங்கவேண்டும்.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியளார்களது படுகொலை தொடர்பாக விசாரணை இடமபெறவேண்டும் என்பதுடன் அவர்களின் குடும்பத்துக்கும் நஷ்டஈட்டை வழங்கவேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பாக ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
15 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
49 minute ago
1 hours ago