2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

37 வர்த்தக நிலையங்களில் சீருடைத்துணியை பெறலாம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத்துணி விநியோகிப்பதற்காக 37 வர்த்தக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நேற்று வியாழக்கிழமை  தெரிவித்தார்.

எனவே, பதிவு செய்யப்பட்ட  வர்த்தக நிலையங்களில் சீருடைத்துணியை பெற்றுக்கொள்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வவுச்சரைக் காட்டி சீருடைத்துணியை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

மேலும், வலயக் கல்வி அலுவலகத்தில் அனுமதி பெறாத  வர்த்தகர்கள் சீருடைத்துணியை மாணவர்களுக்கு  விநியோகிக்க முடியாதெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X