2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

36 வர்த்தகர்களுக்கு அழைப்பாணை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 22 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 36 வர்த்தகர்களுக்கு  நீதிமன்றத்துக்கு சமுகமளிக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமியினால் நேற்று  வியாழக்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் விலைக்காட்டுப்பட்டு அதிகாரிகளால் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பனங்காடு ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த வருடம் ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் ஆகிய மாதங்களில் மேற்கொண்ட திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொருட்களின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, விற்பனைக்காக பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்தமை, நிறை குறைவான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பாக 36 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டபோது, எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் 21ஆம் 28ஆம் திகதிகளில் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்குமாறு மேற்படி வர்த்தகர்களுக்கு அழைப்பாணை  விடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X