2025 மே 21, புதன்கிழமை

'வருமானத்தைப் பெறக்கூடிய தொழிலொன்று அவசியமாகும்'

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.எ.காதர்

வாழ்கைச் செலவு அதிகரித்திருக்கின்ற இன்றைய கால கட்டத்தில், ஒவ்வொரு இளைஞர், யுவதிக்கும்  நிரந்தர வருமானத்தைப் பெறக்கூடிய தொழிலொன்று இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என சமூக சேவையாளரும் பறக்கத் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.ஐ.ஏ.பரீட் தெரிவித்தார்.

மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த திவிநெகும திணைக்களத்துக்கு உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு  விண்ணப்பித்தோருக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு, கடந்த சனி,ஞாயிறுக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மருதமுனை கலை இலக்கிய அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் எம்.ஐ.ஏ.பரீட் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

செலவீனங்கள் அதிகரித்துள்ள இன்றைய கால கட்டத்தில் வருமானம் இல்லாமல் பலர் பெரும் கஸ்டங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதனால் சமூகத்தில் பாரிய பிரச்சினைகள் தோன்றுகின்றன.
ஆகவே, இன்றைய கருத்தரங்குக்கு வருகை தந்திருக்கின்ற இளைஞர்,யுவதிகள் இக் கருத்தரங்கை பயனுள்ளதாக்கி எதிர்காலத்தில் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு  முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

இந்த வழிகாட்டல் கரத்தரங்கில் திவிநெகும தலைமைக் காரியாலய அதிகாரி ஐ.அலியார்,ஆசிரியர் ஏ.எம்.றியாஸ்,டொக்டர் எம்.ஏ.எம்.அஸ்மீர் ஆகியோர் விரிவுரைகளை நடத்தினார்கள்.

இதில், சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.முஜீப், பொருளாளர் எஸ்.எல்.எம்.நழீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .