2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'வரவு-செலவு திட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது'

Niroshini   / 2015 நவம்பர் 22 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

தமிழ் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டமானது பெரும்பான்மை இனத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம்  தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கமானது எமது மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், எமது மக்களுக்கு நன்மை பயக்காததொன்றாக அமைந்துள்ளது.

இவ்வரவு-செலவுத் திட்டமானது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காமல் பெரும்பான்மை இனத்தை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து மீள குடியமர்த்தப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான உதவித்தொகையோ நிவாரணமோ இதில் குறிப்பிடப்படவில்லை என்றார்.

மேலும், எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான எந்தவொரு செயற்பாடும்; இந்த வரவு-செலவுத் திட்டத்தினுள் உள்வாங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X