2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'வரவு-செலவுத் திட்ட தயாரிப்பில் மக்களின் எதிர்பார்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

உள்ளூராட்சி மன்றங்கள்,வரவு-செலவு திட்டத்தை தயாரிக்கின்றபோது,பொதுமக்கள் எந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்பாக்கின்றார்களோ அந்த விடயங்களை ஆராய்ந்து அதில்  கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளூராட்;சி ஆணையாளர் எம்.வை.சலீம் தெரிவித்தார்.

ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு திங்கட்கிழமை (07) நிந்தவூர் பிரதேச சபைக் கட்டத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் பங்ளிப்புடன் வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனும் கருப்பொருளை வரவேற்று அதற்கான வழிகாட்டல்களை  ஆசியா மன்றம் செய்து வருகின்றது.

வரவு-செலவுத் திட்டம் தொடர்பான நுட்ப அறிவுகளை தருவதற்கு ஆசியா மன்றம் மாத்திரமன்றி எந்த நிறுவனங்கள் வந்தாலும் இது தொடர்பான அறிவுகளை பெற்றுக் கொள்வதற்குமறுக்கின்றோம்;.ஆகவே, எதிர்வரும் காலத்தில் இது தொடர்பில் உத்தியோகத்தர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.

மேலும்,எவ்வாறு ஒரு அலுவலகம் இயங்க வேண்டும், அந்த அலுவலகத்தின் செற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு பல வகையான நுட்ப அறிவுகளையும் தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆசியா மன்றம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

நாங்கள் வரவு-செலவுத் திட்டம் என்று பார்க்கின்றபோது கடந்த காலங்களில்  எந்த விதமான ஆய்வுகளையும் பகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளாது செயற்பட்டிருக்கின்றோம் என்றார் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .