2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

615 ஹெக்டேயரில் மேட்டுநில பயிர்ச் செய்கை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 27 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அரசாங்கத்தின் மூன்றாண்டு கால தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையுடன் இணைந்ததாக 615 ஹெக்டேயரில் மேட்டுநில பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இந்நிலையில் கோமாரி, தம்பட்டை, நாவிதன்வெளி, தமண, உகண உள்ளிட்ட பிரதேசங்களில் மேட்டுநில பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பயறு, கௌப்பி, சோளம் உள்ளிட்ட உப உணவுச் செய்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும், நல்லாட்சி அரசாங்கமானது விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

விவசாயம் சம்மந்தமான அமைப்புகளுடன் அவர்களின் வேலைத்திட்டங்கள், பிரச்சினைகள்  தொடர்பில் விவசாயிகள்; கலந்தாலோசிக்க முடியும் என்பதுடன்,  மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் இவர்களின் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

விவசாயிகள் இயற்கைப் பசளையை பாவிப்பதன் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியைப் பெற முடியும் எனவும் அவர் கூறினார்.  

2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X