2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கல்முனையில் சரஸ்வதி பூஜை வழிபாடுகள்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்வியின் அதிபதியாக இந்து சமய மக்களால் வணங்கப்பட்டு வரும் சரஸ்வதியினை கௌரவப்படுத்தி வணக்க வழிபாடுகளுடன் வருடா வருடம் கொண்டாடப்பட்டு வரும் வாணி விழா நிகழ்வுகள் இன்று முதல் கல்முனைப் பகுதியில் களைகட்டியுள்ளது.

கல்முனை மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகரசபை மண்டபத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற வாணி விழாவில் கல்முனை மாநகரசபை மேயர் எம்.ஸட்.மஸுர் மௌலானா, பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர்  மாநகரசபை உறுப்பினர்களும் ஊழியர்களும் உட்பட காரைதீவு பிரதேசசபை தவிசாளர் என்.ஜீவராஜாவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்முனை மாநகரசபையால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் இவ்விழாவில் இவ்வாண்டு சேனைக்குடியிருப்பு திரு நீலகண்ட தேவஸ்தான குருக்கள் சிவ ஸ்ரீ முருகு நல்லதம்பி சிவாச்சாரியர் விழா நிகழ்வுகளை நடத்தி வைத்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .