2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உலக கைகழுவுதல் தினத்தினை முன்னிட்டு மருதமுனை பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

உலக கைகழுவுதல் தினத்தினை முன்னிட்டு மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு கைகழுவுவன் அவசியம் மற்றும் அதன் முறை பற்றி அறிவுறுத்தும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மருதமுனைப் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.எம். ஜரீன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, கைகழுவும் முறை பற்றி மாணவர்களுக்குப் விளக்கமளித்தார்.

இதன்போது வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஆர். நிஹ்மதுல்லா நிகழ்வினை மேற்பார்வை செய்தார்.

அத்துடன் ஆசிரியர்களான, எம்.எம்.எஸ்.ரமீஸா சிராஜுதீன், எப்.என்.எம். ஜுனைட் மற்றும் ஏ.எம்.எம். ரகுமதுல்லா ஆகியோர் மாணவர்களுக்கு கைகழுவுதல் பற்றிய பயிற்சியினை வழங்கினர்.

இதேவேளை, உலக கைகழுவுதல் தினத்தையொட்டி மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நேற்றூ வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானாவின் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் மாணவர்கள் கலந்து கொண்டு, கைகழுவுதலின் அவசியத்தை வலியுறுத்தும் சுலோகங்களை ஏந்திச் சென்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .