2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

உலக கைகழுவும் தின நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், கல்முனை வலயக் கல்வி அலுவலகம், கெப்சோ நிறுவனம் மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியன கூட்டாக ஒழுங்கு செய்திருந்த உலக கைகழுவும் தின நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது கோட்டப் பாடசாலைகளில் இடம்பெற்றன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு கைகழுவுதலின் முக்கியத்துவம் பற்றி பொது சுகாதார பரிசோதகர் எம்.என்.எம்.பைலான் விரிவுரை நிகழ்த்தினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்கள்  பதாதைகளை தாங்கிய வண்ணம் ஊர்வலமாக சென்றதுடன் கைகழுவும் முறை பற்றி செயன்முறை மூலமும் விளக்கமளித்தனர்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .