Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மார்ச் 12 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார், அப்துல் அஸீஸ்)
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட 'திவி நெகும' (வாக்கை எழுச்சி) பொருளாதாரக் கருத்திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 503 கிராம சேவகர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு கிராம சேவகர் பிரிவில் 100 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இச்செயற்திட்டற்குள் உட்படுத்துவதுடன், கிராம சேவகர் அதிகாரி, சமுர்த்தி அதிகாரி, குடும்ப சேவை அதிகாரி மற்றும் விவசாய அபிவிருத்தி அதிகாரி என நான்கு அதிகாரிகள் 100 குடும்பங்களை மேற்பார்வை செய்து அவர்களுக்கான விதை, உரம் உள்ளிட்ட தேவைகளைப் பெற்றுக் கொடுக்கப்பட்வுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இத்திட்டத்தின் மூலம் குடும்பமொன்றுக்கு 10,000 ரூபாவை அரசாங்கம் செலவிடவுள்ளது. எத்தகைய வெளிநாட்டு நிதியுமின்றி தேசிய ரீதியில் இதற்காக நிதி முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் மூலம் ஒரு குடும்பத்தில் மாதாந்தம் 300 கிலோ மரக்கறியை உற்பத்தியாகப் பெற முடியுமானால், 3 இலட்சம் ரூபாவை இதனூடாகப் ஒரு குடும்பம் பெறமுடியுமானால் மாதாந்தம் 1,250 ரூபாவை ஒரு குடும்பம் மொத்தக் குடும்ப செலவிலிருந்து மீதப்படுத்த முடியும். வருடத்திற்கு 15,000 ரூபா இதன் மூலம் மீதமாவதுடன், 15 பில்லியன் ரூபா நிதி உற்பத்தி வருமானமாக் கிட்டவுள்ளன.
விசாயத்துறை மட்டுமன்றி கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, கைத்தொழில் ஆகிய துறைகள் இத்திட்டத்தின் மூலம் மேம்பாடடையவுள்ளன பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
1 hours ago
3 hours ago
3 hours ago
Nafar Sunday, 13 March 2011 03:20 PM
நல்லதொரு திட்டம் .மக்கள் இதை சரியாக பயன்படுத்த வேண்டும் பூங்கன்று வளர்ப்பவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விடயம் இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago