2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது

Super User   / 2011 மார்ச் 16 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் விநாயகபுர பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீடுடொன்றில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த மூவரை துப்பாக்கியுடன் நேற்று மாலை கைது செய்துள்ளதுடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
ஈ.பி.சமந்த எதிரசூரிய தெரிவித்தார்;

விநாயகபுரம் கிராம வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜனவரி 9ஆம் திகதி இரவு 9 மணியளவில் நான்கு பேர் துப்பாக்கியுடன் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்தவவர்களை அச்சுறுத்தி 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துள்ளனர்.

இக்கொள்ளை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கோமாரி பிரதேசத்தில் வைத்து மூவரை நேற்று மாலை கைது செய்யப்பட்;டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் மகசீன் ஒன்று 23 துப்பாக்கி ரவைகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்  கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .