2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விவாக, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி பாசறை

Super User   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சட்டபூர்வ ஆவணமான விவாக, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி பாசறையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது என கல்முனை காணி பதிவாளரும், மேலதிக மாவட்ட பதிவாளருமான எம்.ஏ. ஜமால் முகம்மட் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களை சேர்ந்த விவாக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களும், பிரதேச செயலகங்களிலுள்ள மேலதிக மாவட்டப் பதிவாளர்களும் இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேற்படி பயிற்சி நெறியில் கிழக்கு வலய உதவி பதிவாளர் என்.எம். நயீம் கலந்துகொண்டு விரிவுரை வழங்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் இப்பயிற்சி பாசறைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .