Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 25 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபருமான அல்-ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக் (ஜவாத்) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மைதானத்திற்கான மண் நிரப்பும் பணியை ஆரம்பித்து வைத்தார்.
அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம்அமீர் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஐ.எம்.கடாபி, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ்.எம்.ஏ.லத்திப், சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ.அன்வர் ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக் (ஜவாத்) தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத் திட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாவினை இவ் மைதான அபிவிருத்திற்காக முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்தார். இம்மைதானத்தை பூரணத்துவம் பெற்ற மைதானமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழக செயலாளர் எஸ்.முஹம்மட் கான் முயற்சி எடுத்து வருகின்றார்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக்கின் சேவையினை பாராட்டி கழக உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவித்தனர்.
kulthuran Monday, 25 July 2011 03:14 PM
ஜவாத் இயங்கும் அளவில் எங்கட ஆள் இயங்காதது தொகுதி மக்களுக்கு கவலைதான். பாவம் அவரை விட்டுடுங்க.
Reply : 0 0
siraj .maligaikadu Monday, 25 July 2011 10:41 PM
உண்மையில் பாராட்டத்தக்க விடயம் .....எமது வீரர்களை நாம்தான் ஊக்கபடுத்த vandum .....ஜாவத் அவர்களுக்கு நன்றிகள் ......
Reply : 0 0
cader mohamed Saturday, 30 July 2011 07:05 AM
எங்களுடைய கழகத்துக்கு மைதானம் அமைத்து குடுத்ததுக்கு ஜாவத் அவர்களுக்கு ரொம்ப நன்றியை என்னுடைய சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் தெரிவித்து கொள்கிறேன்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago