2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொத்துவில் கடற்கரை பகுதியிலுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பொத்துவில் அறுகம்பை, உல்லை மற்றும் பாணம போன்ற கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை  அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கரையோர பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சும் கரையோர பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பொத்துவில் பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய பகுதியில் 10 மீற்றர் தூரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக மற்றும் நிதந்தர கட்டடங்களை அகற்றுவதுடன் 20 மீற்றர்  தூரத்திற்குள் எந்தவிதமான புதிய கட்டட நிர்மாண பணிகளையும் மேற்கொள்வதில்லையெனவும் புதிய கட்டடங்களை நிர்மாணிப்போர் பிரதேசசபை,  நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் முன் அனுமதி பெற வேண்டுமெனவும் இந்த கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இலங்கை கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜயந்த பெரேரா தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அணில் பிரேமரெட்ன, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகல, பொத்துவில் பிரதேச செயலாளர், சமயப் பெரியார்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், உல்லாசப் பிரயாணிகள்,  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதிகள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள்,  மத்திய சுற்றாடல் அதிகாரசபை பிரதிநிதிகள்,  வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி, ஆதிவாசி சமூகப் பிரதிநிதிகள், உல்லாச பயணத்துறை அதிகாரிகள் உட்பட பிரதேசசபை தவிசாளர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Wednesday, 27 July 2011 09:32 PM

    எப்படி ஐம்பது மீட்டர் இருபது மீட்டர் ஆனது ? இதுவும் அரசியல் சடுகுடு தானா?

    Reply : 0       0

    ameer Thursday, 28 July 2011 12:29 AM

    இருபது மீட்டார் இருபது அடி ஆகலாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7