2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவான மு.கா. உறுப்பினர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 ஜூலை 30 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் உறுப்பினர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், கட்சியின் தவிசாளரும் உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் மற்றும் கூட்டுறவுத்துறை பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் கௌரவ அதிதியாகவும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துக்கொண்டனர்.                                
                                                                            
இதன்போது,  அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், உதவித் தவிசாளர் எம்.ஏ. அன்சில், உறுப்பினர்களான ஏ.எல். அமானுல்லா, என்.எல். யாசிர் ஐமன், ஐ.எல். அப்துல் முனாப், ஏ.எல். சுபைதீன் மற்றும் எஸ்.எல். முனாஸ் ஆகியோர் பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

            


You May Also Like

  Comments - 0

  • saroo Saturday, 30 July 2011 11:37 PM

    அட்டாளைச்சேனையில் என்ன நடந்திருக்கு இந்த ஊர்வலத்தால்?

    Reply : 0       0

    mama Sunday, 31 July 2011 01:37 AM

    சரோ அண்ணா என்ன நடக்கனுமோ அதுதான் நடந்திருக்கு. உங்கட பார்வையில் என்ன நடக்கனும் சொல்லுங்க.

    Reply : 0       0

    rakkish Sunday, 31 July 2011 02:00 AM

    நாங்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து மாமனிதர் விட்டுச்சென்ற கட்சி கீதத்த போட்டு விட்டு கதைப்போம் பாருங்க.... மக்கள் அப்படியோ மதி மயங்கி நிற்பாங்க.. ஆனா நாங்க என்ன கதைக்கிரோம்கிறதே விளங்காது... வாக்குகள் கொட்டப்படும் நாங்கள் வெல்லுவோம்.. மக்களை முட்டாளாக்கி விட்டோம் என்று வெற்றி ஊர்வலம் ... அடுத்த தேர்தலில் சந்திக்கும் வரை விடை பெறுகிறோம்.. இதுதான் இன்றைய நிலைமை..

    Reply : 0       0

    ibnuaboo Sunday, 31 July 2011 06:50 PM

    கலர்புல்லாக மேடைபோட்டு எஜமானர்களாக ஊர்வலம்போய், மக்களை மயக்கினால் தான் கட்சிக்கு சக்தி பிறக்கும். பக்கத்து ஊர் அமைச்சருக்கும் எரிச்சல் உண்டாக்க இது ஒரு பொன்னான சந்தர்ப்பம் அல்லவோ. .

    Reply : 0       0

    Thariq Niyas Sunday, 31 July 2011 07:59 PM

    எங்களுக்கு தேவை அபிவிருத்தி அல்ல உரிமை... உரிமை பெற்ற பின் அபிவிருத்தி செய்யலாம்... உரிமையை அடகு வைக்கும் அமைச்சர்கள் எனகளுக்கு தேவை இல்லை..

    Reply : 0       0

    saroo Monday, 01 August 2011 04:11 AM

    உங்களுக்கு தேவையான உரிமையைத்தான் நாங்களும் சொல்கிறோம். உரிமை உரிமை என்று இருந்த எல்லாருமே வெளியேறினால் எங்கிருந்து இந்த உரிமை வரும்?

    Reply : 0       0

    saroo Monday, 01 August 2011 07:38 PM

    அட்டாளைச்சேனையில் போடப்பட்ட பல்ப்புக்கள் ஒரு வாரம் முடியும் முன்னரே பழுதாகிவிட்டதே. என்ன இலவசமாக கிடைத்த லைட்டா என்று கேட்டு சொல்லுங்களேன்.

    Reply : 0       0

    முனாஸ் பிரதேசசபை உறுப்பினர் Monday, 01 August 2011 07:44 PM

    அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்குங்கள். நிச்சயமாக எல்லாம் நன்றாகவே நடக்கும்.

    Reply : 0       0

    samrana Tuesday, 02 August 2011 04:55 AM

    இதற்குமுன்னர் வழங்கியது எல்லாம் ஊதுளைப்பா

    Reply : 0       0

    senaiyuran Tuesday, 02 August 2011 05:23 AM

    அட்டாளைச்சேனையின் அபிவிருத்திக்கு என்ன உத்தரவாதம் தந்தார் தலைவர் ஹக்கீம்?

    Reply : 0       0

    senaiyuran Tuesday, 02 August 2011 05:30 AM

    முனாஸ் உங்களின் தவிசாளருக்கு சொல்லுங்க ........ கல்முனை பள்ளிவாசலையும் மார்கட்டையும் பிரித்து பாதை அமைந்ததை அவேதாநிக்க சொல்லுங்க தேர்தல் போய் விடும், இறைவன் கேட்பான் என்பதை ஞாபகம் ஊட்டுங்கள்.

    Reply : 0       0

    நண்பன் Tuesday, 02 August 2011 07:01 PM

    சேனையூரான் அவர்களே முனாஸ் அட்டாளைச்சேனை பிரதேசசபையின் உறுப்பினர் அவர் ஏன் கல்முனையை அவதானிக்கனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7