Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது கரைவாகு வட்டையிலுள்ள சுனாமி வீட்டு திட்டத்திற்கு குடிநீர் வசதியினை பெறுவதற்கான காசோலையை கல்முனை மாநகர சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கலாநிதி எம். சிராஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்தார்.
கடந்த சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீனவ குடும்பங்களுக்கு இபாட் அமைப்பினால் சாய்ந்தமருது கரைவாகு வட்டை பிரதேசத்தில் 60 வீடுகளை கொண்ட வீட்டு திட்டமொன்று கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
இக்குடும்பங்கள் குடிநீர் வசதியினை பெறுவதற்காகவே கலாநிதி சிராஸினால் காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கரைவாகு வட்டையில் குடியமர்த்தப்பட்டுள்ள பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
M. Majeed Monday, 29 August 2011 11:28 PM
என்னதான் நடக்குது. சிராஸ் நல்லது செய்யட்டும். ஆனா நாட்டு வைத்தியரும் Dr. என்று பேருக்கு முன்னால் போடுற மாதிரி கலாநிதி என்ன அவ்வளவு மலிஞ்சா போச்சு? பல்கலைக்கழக மானிய ஆணைக்குளுதான் இதுக்கு நடவடிக்கை எடுக்க வேனும். ஏன்யா மனச்சாட்சி இல்லாம கலாநிதி என்று போடுகிறாய்? அது என்னய்யா JP பட்டமா?
Reply : 0 0
firas Tuesday, 13 September 2011 02:35 PM
ஷவ்பி தயவு செய்து SLMC யை கேட்டுபாருங்கள் இவர் என்ன செய்திருக்கிறார் என்று. கட்சிக்கு நல்ல விடயம் செய்வதற்கு போராளியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?
Reply : 0 0
firas Monday, 12 September 2011 05:19 PM
Why most people r worried about the Dr title. He is doing something to the community let him do. Everyone goes for higher studies to UK and then get the work permit. That is the usual way, but when it has been done Siraz it is worrying some of the guys in here. If u dislike anyone better don't criticize anyone in public.
Reply : 0 0
padayappa london Monday, 05 September 2011 09:09 AM
ஹாய், பிரண்ட்ஸ் லேட் ஹிம் டு டூ தி ஜொப் ப்ளீஸ் ,,,,,,,
Reply : 0 0
veera Saturday, 03 September 2011 05:12 AM
விமர்சிப்பவர்கள் ஏன் முன்மாதிரியாக . . .
Reply : 0 0
Maaim Friday, 02 September 2011 11:50 PM
There are many ways to cheat the people. Now a days involving politics also coming under hidden cheat. We studied and observed these from the Kalmunai electoral. Most politicians are great cheaters and jokers here.
Reply : 0 0
siraj Thursday, 01 September 2011 10:29 PM
எனக்கு அப்படி ஒரு பட்டம் இல்லையே, அது சிறாஜ் இல்லை சிறாஸ். சரியா நல்லா பெயரை பாருங்கப்பா.
Reply : 0 0
london ray Thursday, 01 September 2011 04:03 PM
சிராஜ் உங்களுக்கு இப்பொழுதுதான் சாய்ந்தமருது மக்கள் பற்றி நினைப்பு வந்தது?
Reply : 0 0
siraj Wednesday, 31 August 2011 09:32 PM
இப்ப முக்கியம் கலாநிதிப்பட்டமா? ஐய்யோ குழப்புறிங்களே எல்லாருக்கும் முதல்ல புனித பெருநாள் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Nafeel Wednesday, 31 August 2011 02:03 AM
லண்டன் ஜியாத் கேட்பது போல UK க்கு வேலை தேடி போய் வார எல்லாரும் பேருக்கு முன்னால் கலாநிதி என்று போட்டால் நாடு தாங்குமா?
Reply : 0 0
london ziyath Tuesday, 30 August 2011 06:49 PM
சிராஜ் உங்கள் கலாநிதி பட்டம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் ???????
Reply : 0 0
siraj Tuesday, 30 August 2011 07:14 AM
மஜீட் என்ற பெயரில் கொமண்ட் பண்ண்யிருக்கும் கா . கூ.. இது வேட்பாளர் மஜீட் அல்ல மற்றது தம்பி சிராஸ் நல்லது செய்யட்டும் முழக்கம் மஜீதுடன் இணைந்து போகட்டும் நல்லது நடக்கும் நாமும் வாழ்வோம் மற்றவரையும் வாழ வைப்போம். ஒரு முட்டைக்கு கூவும் கூட்டமாக இருக்காமல் ஆயிரம் முட்டையுடன் அமைதியாக குடும்பத்தை பெருக்கனும்
எதுக்கும் பொறுத்து இருப்போம் மஜீத்தா சிராஸா என்று
Reply : 0 0
Shawfy Sunday, 28 August 2011 08:44 PM
யார் இந்த கலாநிதி சிராஸ்? எந்த பல்கலைக்கழகத்தில் பீ.ஏ மற்றும் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார்???????? இவர் எத்தனையாம் ஆண்டிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் போராளியானார்???????? முஸ்லிம் காங்கிரஸுக்காக இவர் என்ன செய்துள்ளார்???????? சாய்ந்தமருது மக்களுக்கு இவரை தெரியுமா????????????? நேற்று வந்தவர்களையெல்லாம் மதிக்கிறது இந்த கட்சி தலைமைத்துவம்???????????????????? ஐயோ, பாவம் இந்த கட்சி.
Reply : 0 0
meenavan Monday, 29 August 2011 11:57 AM
எது இருந்தாலும் மக்களின் வாக்கு பெற்று மாகாண சபை,பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து செய்யாததை சிராஸ் செய்வதற்கு ஒரு சபாஸ்.
Reply : 0 0
Doc - KSA Monday, 29 August 2011 11:33 AM
We need, intellectuals to lead the community. It''s a good move but we should wait and observe, how are they going to handle our issues.
Reply : 0 0
siraj Monday, 29 August 2011 06:35 AM
வைக்கோல் போருக்கு பக்கத்தில் உறங்கு நடையன் மாதரி திண்ணுவதும் இல்லை தின்னவிடுவதும் இல்லை. விடுங்க யாரேனும் நல்லது செய்யட்டும். இவரு பணம் வைத்திருக்கார் செய்கிறார். ஆனால் நன்மை கிடைக்கும் வோட்டு கிடைக்குமா?..
Reply : 0 0
rakkish Monday, 29 August 2011 02:05 AM
ஏதோ தேர்தல்கள் வருவதாளாவது மக்களுக்கு ஏதோ கிடைக்குது.. இந்த மக்கள் இன்று, நேற்று குடியமர்த்தப்பட்டவர்கள் அல்ல.. இன்னுமெத்தனை குறைபாடுகள் உள்ளது என்பது அந்த பிரதேச மக்களுக்கு தான் தெரியும்..இப்படியாது மக்கள் குறைகள் தீர்க்கப்படட்டும்.. நன்றி...
Reply : 0 0
Rozan Monday, 29 August 2011 01:26 AM
உழைப்பதக்கு முதலீடு செய்கிறார்...மாறாக தனது சொந்த்தப்பனத்தை செலவு செய்து இருப்பாராயின் முந்திய காலங்களில் செய்திருக்க வேண்டும்.
Reply : 0 0
jaward Monday, 29 August 2011 01:21 AM
சவ்பி, பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற கலாநிதிகளையும் உங்களுக்கு பிடிக்குதில்ல ... முறைகேடாக பெற்ற கலாநிதிகளையும் உங்களுக்கு பிடிக்கல்ல. அப்படின்னா நீங்க என்ன படிச்சு கிழிச்சிருக்கீங்க.....?
Reply : 0 0
jameel Sunday, 28 August 2011 11:35 PM
வைக்கோல் பட்டறை நாய் போல் ஆகிவிட்டது எமது சமூகம். கொடுப்பதும் இல்லை கொடுப்பவரை விடுவதும் இல்லை.... என்னைய இந்த உலகம்.
Reply : 0 0
Thameem akp Sunday, 28 August 2011 11:32 PM
சவ்பி... ஏற்கனவே முஸ்லிம் காங்கிஸில் இருந்தவர்கள் என்ன கிழித்துவிட்டார்கள்.....? ஆனால் அரசியலுக்கு சென்றுதான் சேவை செய்யவேண்டும் என்ற தேவை சிராசுக்கு இல்லை...
கொடுத்து பழகிய கையல்லவா ?......
Reply : 0 0
munthasir Sunday, 28 August 2011 11:28 PM
செய் அல்லது செத்துமடி....... வாழ்த்துக்கள் சிராஸ்
தூற்றுவார் தூற்றற்றும் .... அது வழமையானது....
உன் முயற்சியை கைவிடாதே ......
Reply : 0 0
abcd Sunday, 28 August 2011 10:16 PM
வாழ்த்துக்கள் சிராஸ். ஆனாலும் காங்கிரசின் முடிவு தவறானது.
Reply : 0 0
amaan Sunday, 28 August 2011 08:48 PM
ஆரம்பமே மக்களுக்கு உதவி செய்வதாகவே அமைந்துள்ளது. நிச்சயம் இதற்கான கூலியை ஆண்டவன் தருவான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago