2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் அப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி குழுவொன்றினை அமைத்தல் தொடர்பான கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனால், ஐ.எல். மனாப், ஏ.எல். அமானுல்லா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நெல்சிப் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள சந்தை கட்டிடம் தொடர்பாகவும், அந்தக் கட்டிடத்தை அமைப்பதைத் தடுக்கும் வகையில் அரசியல்வாதிகள் சிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அட்டாளைச்சேனை  பிரதேசம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான அபிவிருத்தி குழுவொன்று அமைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • sharmee Tuesday, 06 September 2011 06:36 PM

    எல்லாம் சரி. கனவு அதிபர் என்ன சொல்லறார் .??????

    Reply : 0       0

    S.Abdeen Tuesday, 06 September 2011 06:57 PM

    இது ஒரு நல்ல முயற்சிதான். அனால் பிரதேச அபிவிருத்தி என்று வரும்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசியல்,பிரதேச பாகுபாடுகளுக்கு அப்பால் சென்று செயற்படல் வேண்டும்.

    அதுமாத்திரமன்றி ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்படை தன்மையோடும், மக்கள் பங்கேற்போடும் பொறுப்புணர்வோடும் செயற்பட்டு, சகல அபிவிருத்தி பங்காளர்களையும் இணைத்துக் கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்தியை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுதல் வேண்டும்.

    Reply : 0       0

    siraj Thursday, 08 September 2011 04:49 AM

    ஊருக்கு நல்லது செய்வோம் என்று ஒன்று கூடியிருக்கும் உங்களுக்கு நன்றி. ஆனால் வீதியில் கூவித்திரியும் கோதாரிகளுக்கு மருந்து எடுத்து கொடுங்க நசீர் அவர்களே. அல்லது முனாஸ் அவர்களே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7