Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட், எம்.சீ.அன்சார்)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் வழங்கப்பட்ட நிதி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான முஸ்லிம் மீடியா போரம் நிதியுதவி அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்மேளன தலைவர் கலாபூஷன் மீரா எஸ். இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிராந்திய ஊடகவியலாளரும் சமாதான கற்கை நெறிக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளரான கலாநிதி எஸ்.எல்.றியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன்போது, அண்மையில் காலமான பிராந்திய ஊடகவியலாளர் ஏ.எம்.அலிகான் நினைவு கூரப்பட்டதோடு, அவருக்காக பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து, செயலாளர் ஐ.எல்.எம். றிஸான் மற்றும் பொருளாளர் யூ.எல். மப்றூக் ஆகியோரால் கடந்த கால அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
மேலும், சம்மேளனத்தின் உறுப்பினர்கள் தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் நலன் குறித்து மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
Nusky Sunday, 11 September 2011 05:01 AM
நல்ல நியூஸ்.... அடுத்த மழைக்கு முதல் கிடைசிட்டு.......!!!!! பாவம் இந்த ஊடகவியலாளர்கள்... அம்பாறை மாவட்ட வெள்ளத்தை உலகிற்கு எடுத்து சொன்னவர்கள்...ஆனால் இவர்களுக்குரிய நிவாரணம் கடும் வெயிலில் தான் கொடுக்கப்பட்டது... "Late better than never"
Reply : 0 0
kl kalanthar Sunday, 11 September 2011 05:23 PM
கலாநிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவரா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
49 minute ago
52 minute ago
54 minute ago