Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 11 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தின் பல வீதிகள் பயணிக்க முடியாதவாறு மிகவும் மோசமடைந்து காணப்படுகிறன. இப் பகுதியிலுள்ள மக்களில் கணிசமானோர் தமக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளனர். அதேபோன்று இங்குள்ள ஹிஜ்றா வித்தியாலயத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. அடுத்த வருடம் இப் பாடசாலைக்கு புதிதாகச் சேரும் மாணவர்களுக்கான வகுப்பறைகள் இங்கு இல்லாமல் உள்ளன. எனவே, செந்நெல் கிராமத்தின் இது போன்ற குறைபாடுகளை ஊடகங்களில் வெளிவரச் செய்து, அவைகளுக்கு உரிய தரப்பினரிடமிருந்து தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு தான் மிகவும் தயவுடன் வேண்டிக் கொள்வதாக சம்மாந்துறை செந்நெல் கிராம ஹிஜ்றா வித்தியாலய அதிபர் எம்.எம். மீராமுகைதீன் கோரிக்கையொன்றினை முன்வைத்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் செந்நெல் கிராம மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் செந்நெல் கிராம ஹிஜ்றா வித்தியாலய மண்டபத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மீராமுகைதீன் மேற்கண்ட கோரிக்கையினை முன்வைத்தார்.
மேற்படி சந்திப்பில் செந்நெல் கிராம பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். அப்துல் கபூர், பள்ளிவாசல் இமாம் மற்றும்; முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளப் பிரதிநிகளுக்கும் செந்நெல் கிராம மக்களுக்குமிடையிலான இச் சந்திப்பினை ஊடகவியலாளரும் சமாதான கற்கை நெறிக்கான நிறுவனத்தின்; பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சார்பில்; அதன் தலைவர் கலாபூஸன் மீரா எஸ். இஸ்ஸதீன் உட்பட, ஊடகவியலாளர் நிருவாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Nafeel Monday, 12 September 2011 08:38 PM
நல்ல விடயம். திரு எஸ். எல். ரியாஸ் அவர்கள் இவ்வாறான முன்னுதாரணங்களை மேலும் தொடர வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago
47 minute ago
55 minute ago