Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 21 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் மரபுரிமை எனும் தலைப்பிலான நூல் இன்று புதன்கிழமை இலங்கை மன்ற கல்லூரியில் வெளியிடப்பட்டது.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள இந்நூலை மூத்த கல்வியியலாளரும் இலக்கியவாதியுமான எச்.எச்.எம்.ஜெமீல் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர் ஆசிப் ஹுசைன் ஆகியோர் தொகுத்துள்ளனர்.
இந்நூலிலுள்ள 11 ஆய்வு கட்டுரைகளை இலங்கையின் முன்னணி கல்விமான்கள் பலர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நூல் வெளியீட்டு நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணின் தலைவியான கலாநிதி ஜெஸீமா இஸ்மாயில், எச்.எச்.எம்.ஜெமீல் மற்றும் ஆராய்ச்சியாளர் மிராஹ் றஹீம் ஆகியோர் உரையாற்றியதுடன் கலாநிதி எம்.ஏ.நுஃமான் நூல் ஆய்வு உரையினை நிகழ்த்தினார்.
கிழக்கு மாகாண பாரம்பரியங்களை வெளிக்காட்டும் வகையில் நாட்டாரிய பாடல்கள், பக்கீர் பைத் மற்றும் பொல்லடி என்பனவும் இவ்வைபவத்தின் போது இடம்பெற்றன. (படங்கள்: இன்ஸாப் ஸலாஹுதீன்)
meenavan Thursday, 22 September 2011 05:51 AM
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் முயற்சி பாராட்டுக்குரியது. அம்பாறை மாவட்ட கல்விமான்கள் ஒரே மேடையில் காணக்கிடைத்தது மனதிற்கு இதமாக உள்ளது.
Reply : 0 0
sadath Thursday, 22 September 2011 02:11 PM
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.....
Reply : 0 0
Murshidha Meera Lebbe Friday, 23 September 2011 09:50 PM
MWRAF இன் மற்றுமொரு மைல்கல் நிகழ்வு. வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. ஆக்கபூர்வமான முயற்சிகள் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Ali Akram Sunday, 25 September 2011 01:18 AM
Xcellent! Thanks to be an Eastern. Good work. I pledge all eastern muslims should unite forgetting. Good luck!
Reply : 0 0
Sanoon Mohideen Tuesday, 27 September 2011 07:28 AM
நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டியதே.... இருப்பினும் இதனை கிழக்கு மண்ணில் நடாத்த முடியாமல் போன காரணம் ஏனோ....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago