Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் தமன பிரதேசத்திலிருந்து பன்னலகம பிரதேசத்திற்கு செல்லும் 23 கிலோமீற்றர் நீளமான பிரதான வீதியை நிர்மாணிப்பதற்கான ஆரம்ப வைபவம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
மேற்படி வீதி உலக வங்கியின் நிதியுதவியுடன் 500 மில்லியன் ரூபாய் செலவில் கார்ப்பட் வீதியாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
தமன பிரதேச செயலாளர் கே.எம்.சுபாசினி தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில்; பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா,
அதிதிகளாக கிழக்கு மாகாணசபை வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, மகாணசபை உறுப்பினர் கலப்பதி, தமன பிரதேசசபை தவிசாளர் டி.எம்.வீரசிங்க, அமைச்சின் அதிகாரிகள்
கலந்துகொண்டு பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தனர்.
Riyal A.M Sunday, 02 October 2011 07:51 PM
முடியல்ல.... ஐயோ .. பாவம் ... சொந்த ஊர் மக்கள் .......... ஐயோ .. பாவம்.......
Reply : 0 0
Riyal A.M Sunday, 02 October 2011 07:53 PM
இங்கயும் யுத்தத்தாலா வீதிகள் பாதிக்கப்பட்டிருக்கா.. ?? ?? ??
Reply : 0 0
avathane Monday, 03 October 2011 07:31 AM
அதாஉல்லாஹ் வின் சாயம் வெளுக்கிறது. இவருக்கும் வீதி அபிவிருத்திக்கும் என்ன சம்பந்தம்? அக்கரைபத்தில் இவரால் ஒரு வீதியும் போடமுடியாது. பவம் உதுமான் உள்ளுக்குள் புளுங்குஹிறார்.
Reply : 0 0
Sanoon Mohideen Monday, 03 October 2011 07:38 PM
23 KM வீதியா...? இங்க 3KM வீதி போடுறதுக்கே அவருக்கு vote போடவேனுமாம்... ஆனா அங்க????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago
3 hours ago