Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன.
டிசம்பர் 01 சர்வதேச எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பாலியல் தொற்றுநோய்ப் பிரிவும் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து எயிட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம், விழிப்புணர்வுக் கருத்தரங்கு, எயிட்ஸ் தொடர்பான நூல் வெளியீடு ஆகிய நிகழ்வு நடத்தின.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.எம்.அப்துல் மஜீட், விசேட அதிதிகளாக பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.இஸ்ஸதீன், பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்.எஸ். வாஹிட், பிரதித் தவிசாளர் எம்.தாஜுத்தீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பாலியல் தொற்றுநோய்ப் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
pasha Friday, 02 December 2011 07:03 PM
பொத்துவிலில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுவது மிக சிறந்தது.
Reply : 0 0
Pottuvilan Friday, 02 December 2011 07:44 PM
பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ,எம்.எஸ் .எம் வாசீத் என திருத்தி வாசிக்கவும்,.
Reply : 0 0
kann Saturday, 03 December 2011 03:31 AM
என் அப்படி சொல்லுறீங்க?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
24 Jun 2025
24 Jun 2025