Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள பின்தங்கிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அப்பாடசாலைகளின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன மேற்கொண்டு வருகின்றார்.
இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலயக் கல்விப் பிரிவிற்குட்பட்ட ச/து-ஜமாலியா வித்தியாலயத்தின் குறைபாடுகளை கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்பாடசாலைக்குச் சென்றார்.
அப்பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் பாடசாலையின் அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவிடம் எடுத்துக் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
33 minute ago
2 hours ago