Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
நிந்தவூர் பிரதேச சபையின் 2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை எதிராக வாக்களித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் இணைப்புச் செயலாளரான எம்.எம்.அன்சார் மற்றும் பிரதேச உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளரான எம்.ரி.ஹசன் அலியின் சகோதரும் இணைப்புச் செயலாளருமான எம்.ரி. ஜப்பார் அலி ஆகிய இருவருமே வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துனர்.
இதேவேளை, நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் வேண்டுகோளிற்கினங்கவே இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிராக வாக்களித்த இரண்டு உறுப்பினர்களும் விவாதத்தின் போது தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளரான தனக்கு, உரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை எனவும் பிரதி தவிசாளர் எம்.எம். அன்சார் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் 2012ஆம் ஆண்டுக்கான நிந்தவூர் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 2 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
meenavan Friday, 23 December 2011 04:01 AM
குண்டான் சட்டியில் குதிரை ஓடுகிறது.
Reply : 0 0
jowsi Friday, 23 December 2011 04:26 AM
இவர்கள் எல்லோரும் எதிர்த்தாலும் பிரதேச சட்டப்படி தவிசாளரால் இதனை நிறைவேற்ற முடியும்.
Reply : 0 0
சிறாஜ் Friday, 23 December 2011 04:54 AM
jowsi,
சபையில் எல்லாரும் எதிர்த்து ஒரு சட்டம் தவிசாளரால் கொண்டுவரலாம் என்றால் யாரிடமும் எதுவும் சொல்லாமலே அப்படி ஏதாவது செய்யலாமே. சும்மா நாக்குக்கும் உதட்டுக்கும் சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது. சட்டம் என்ன உங்க வீட்டு கிச்சன் மாதிரியா நினைத்த நேரத்துக்கு நெருப்பு வைக்க..
Reply : 0 0
Hari Friday, 23 December 2011 05:03 AM
ஏன் இவர்கள் எதிர்த்தார்கள்? புரியவில்லை
Reply : 0 0
Noushard Friday, 23 December 2011 10:28 AM
பாராளுமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள் என்பதற்காக எதிர்க்கும் இவங்களுக்கு சொந்த புத்தி இல்லையாக்கும் ........... அம்பாறை மாவட்டத்திலேயே அபிவிருத்திக்கு உட்படாத ஊருண்டா அது நம்ம ஊரு தானுங்க.......என்ன பண்ண? காலம் வரட்டும்.
Reply : 0 0
செம்பகம் Friday, 23 December 2011 02:31 PM
இவர்களுக்குறிய கொந்திராத்து போகல்லையாக்கும் ம்..............ம்........
Reply : 0 0
riyas Friday, 23 December 2011 05:29 PM
இவர்கள் எல்லோரும் எதிர்த்தாலும் பிரதேச சட்டப்படி தவிசாளரால் இதனை நிறைவேற்ற முடியும்- தவிசாளருக்கு அது முடியும் சட்டத்தில் இடம் உண்டு சட்டத்த சரியாய் படியுங்கோ தம்பி சிராஜ்.
Reply : 0 0
janoovar Friday, 23 December 2011 07:59 PM
உறுப்பினர்களே நீங்கள் தவிசாளர்கள் ஆகாததனால் இப்படி செய்யவது நல்லம் அல்ல. எங்க தலைவர் சட்ட நடவடிக்கை எப்போது?
Reply : 0 0
lankan Saturday, 24 December 2011 09:24 AM
உருப்பட்ட மாதிரி தான் முதலில உங்க கட்சி பெயர மாத்துங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
30 minute ago
2 hours ago